வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பதாதைகள்

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பதாதைகள்.வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பதாதைகள் நிறுவப்பட்டுள்ளன.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இப் பதாதைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை வாழ்த்தியும், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் அவர்களை வாழ்த்தியுமே குறித்த பதாதைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்காரணமாக வீதிக் குறியீடுகளை அவதானிக்க முடியாதுள்ளதுடன், போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த பதாதைகளை அமைப்பதற்கு நகரசபைக்கு செலுத்த வேண்டிய வரி செல்லுத்தப்பட்டுள்ளதா எனவும்  வரியிறுப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்த வில்லை என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.