ரணில் விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறப்பாக அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதே எமது கருத்தாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யச் சென்றபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கடுமையாக சாடி உரை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது, அனைத்து உறுப்பினர்களும் அமைதியாகவே அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர். இதிலிருந்தே அந்தத் தரப்பினர் ஜனாதிபதியின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
இதற்காகத் தான் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லுமாறு நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். எனினும், இதனை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. தரப்பினர் இல்லாதொழித்துள்ளனர்.
இதற்கெதிராக தற்போது இடைக்காலத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் எமக்கு பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து, இதனை ஏற்றுக்கொள்கிறோம்.
இதனை ஏற்றுக்கொண்டு தற்போது மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் இடைக்காலக் கணக்கறிக்கையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றே அவர் பதவி விலகியுள்ளார்” என வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை