தமிழ் எம்பிக்கள் ஐந்து அமைச்சுப்பதவிகளையாவது எடுக்க வேண்டும் இல்லாவிடின் நான் தீக்குளிப்பேன்.

இலங்கையின் மிகப்பெரும் அபிவிருத்தித் திட்டமான "மொரகந்த" திட்டத்தை நிறைவேற்றி பெருமிதத்துடன் ஜனாதிபதி மைத்திரி.இதனால் ராஜரட்டை பிரதேசமே செல்வச்செழிப்புமிக்க பிரதேசமாக மாறப்போகின்றது.

ஆனால் தமிழர்கள் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் போலித்தேசியம் பேசி ஈழத்தை சோமாலியாவாக மாற்றிக்கொண்டேஇருக்க போகிறோமா???
எனினும் இலங்கையின் மொத்த அமைச்சரவையில் இனிவிகிதாசாரத்தின் படி பார்த்தாலும் தமிழர்களிலும் ஆறு அமைச்சர்களாவது இருக்க வேண்டும்.
எனென்றால் அமைச்சுக்களிற்குரிய நிதியானது தனியாக சிங்கள மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வரிகள் அல்ல.
தமிழ் மக்களின் வரிகளும் அடங்கும்.
ஆனால் அரசாங்கத்திற்கு நாங்கள் வரி செலுத்துகின்றோம் எனவே அரசாங்கத்திடமிருந்து ஊழியம் பெறலாம் என கூறிக்கொண்டு அரசாங்க ஊழியம் பெறும் போலித்தேசியவாதிகள்
அமைச்சுக்கான நிதிகளை பற்றி சிந்திப்பதே இல்லை.
அவர்கள் அங்கு எமது வரிகளைத்திருடி மேல்மாகண அபிவிருத்திக்கென தனி அமைச்சையே வைத்திருக்கிறார்கள்.
நாங்கள் இங்கே அவர்கள் இன்னார் உவர்கள் அன்னார் எண்டு புலம்பிக்கொண்டிருப்போம்.
எனவே எதிர்வரும் காலங்களிலாவது தமிழ் எம்பிக்கள் ஐந்து அமைச்சுப்பதவிகளையாவது எடுக்க வேண்டும்
இல்லாவிடின் நான் தீக்குளிப்பேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.