திமுகவை சீண்டும் ஹெச்.ராஜா
கஜா புயல் பாதித்த மக்களுக்கு வழங்கியிருக்கலாமே என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்
கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் சேடிஸ்ட் என கூறியதை மக்கள் ரசிக்கவில்லை. வன்மையாக கண்டிக்கிறார்கள். தமிழகத்தில் பிரிவினை சக்திகளுக்கு திமுக அரவணைப்பு தருகிறது. மறைந்த திமுக தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில், மதிமுக, விசிக விற்கு மேடையில் இடம் தராதது திமுக பொருளாளர் துரை முருகன் கூறியது போல அக்கட்சிகள் கூட்டணியில் இல்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோயில் சிலைகள் மீட்கப்பட்டதாக கூறும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிலைகள் எப்படி திருடப்பட்டது என்பதை கூற வேண்டுமென கூறினார் .
மத்திய அரசு கஜா புயல் நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு, கஜா புயல் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து இறுதி அறிக்கை மத்திய அரசிற்கு வரவில்லை எனவும், ஊடகங்கள் தவறான செய்தியை திரித்து வெளியிட கூடாது எனவும் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஏற்கவில்லை எனவும், அக்கூட்டணியில் தலைக்கு தலை நாட்டாமை என்ற நிலை உள்ளது எனவும் கூறிய அவர், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிலையற்ற நபர் என தெரிவித்தார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் சிலை அமைக்க செலவு செய்த நிதியை, கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே? என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்

.jpeg
)





கருத்துகள் இல்லை