வெலிமடையில் பஸ் சாரதி கொலை


வெலிமடை நகரில் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பஸ் சாரதி
ஒருவரை தாக்கிக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிமடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று (19) பகல் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் பஸ் சாரதி ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பஸ் போக்குவரத்திற்கான நேர அட்டவணையை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப்பெற்று இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலின் பின்னர் இரு சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

No comments

Powered by Blogger.