மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பினால் பாடசாலை மாணவா்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவரும், தகவல் தொழிநுட்ப விரிவுரையாளருமான முஸ்தபா முபாறக் தலைமையில்நேற்று( 21 ) 17ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவ் அமைப்பின் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 17ஆம் வட்டார கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் மற்றும் கௌரவ அதிதியாக மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும், முஸ்லிம் சமய கலாச்சார மற்றும் தபால் சேவைகள் அமைச்சரின் இணைப்பாளருமான அஸ்வான் மௌலான அவர்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தாணீஸ் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் கல்முனை 17ஆம் வட்டார மசூரா குழுத்தலைவரும் 14 கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் அகில இலங்கை சமாதான நீதவானுமான மௌலவி வை.பி. ஜமால்த்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன்

மேலும் நிகழ்வில் இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பின் செயலாளர், பொருளாளர், பிரதி தலைவர், கணக்காளர், நிர்வாக உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo Powered by Blogger.