மீ டூ: அதிதிக்கு நேர்ந்த கொடுமை!

திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகள் மீ டூ இயக்கம் மூலம்
தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தியத் திரையுலகம் முழுவதும் பாரபட்சமின்றி அனைத்துப் பகுதிகளிலும் இக்கொடுமை நடைபெற்றுவருவது பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரிகிறது. காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அதிதி ராவ்தி ரைத்துறைக்கு வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்துப் பேசியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் ‘இந்தியா டு டே 2018’ கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“எனது குடும்பப் பின்னணி காரணமாக நான் அப்பாவியான பெண்ணாகவே இருந்தேன். பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைப்பது குறித்து வரும் வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு அப்போது தெரியாது. எனக்கு மோசமான வகையில் எதுவும் நடந்துவிடவில்லை என்றாலும் ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இதுவா அல்லது அதுவா என்று எனக்கு சாய்ஸ் கொடுக்கப்பட்டது. அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று நினைத்துக் கிளம்பிவிட்டேன். அதன் பிறகு எனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு எட்டு மாதங்களாக எனக்கு எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை. வாய்ப்புகள் பறிபோனதும் நான் வருத்தப்படவில்லை. ஆனால் கண்ணீர் விட்டு அழுதேன். ஏனென்றால் இது பற்றிய வதந்திகள் என்பது உண்மை என்பதும் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று தெரியவந்ததும் அழுதேன்.
மீ டூ இயக்கம் வேறு மாதிரியாகத் திசை திரும்புகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். அப்படிப் பேசவில்லை என்றால் ஓ, பணம் வாங்கியிருப்பார், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று பேசுகிறார்கள். தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்” என்று அதிதி பேசியுள்ளார்.

No comments

Powered by Blogger.