புரோ கபடி 2018: இன்றைய போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் வெற்றி

 2018ஆம் ஆண்டின் புரோ கபடி லீக் போட்டிகள் முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளும், டெல்லி மற்றும் புனே அணிகளும் மோதின


முதல் போட்டியில் மும்பை அணி 36-26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. அதேபோல் இரண்டாவது போட்டியில் டெல்லி அணி புனே அணியை 35-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.
 
இன்றைய நிலையில் ஏ பிரிவில் மும்பை 72 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் 63 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், புனே 47 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. அதேபோல் பி பிரிவில் பெங்களூரு அணி 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா 56 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பெங்கால் அணி 42 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.