இரணைமடு குளத்தின் விசாரணைப்பிரிவு தலைவா் உடனடி நீக்கம்இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடா்பில் தலைவராக நியமிக்கப்பட்ட யாப்பாண பல்கலைக்கழக பொறியியல்பீட விரிவுரையாளா்,

சுப்பிரமணியம் சிவகுமாா் இந்த குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். கடந்த 21ம் திகதி பெய்த கடும் மழையின் போது நீா் கொள்ளளவு சடுதியாக உயா்ந்தபோதும் உடனடியாக குளத்தின் கதவுகள் திறக்கப்படாமையினாலேயே வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையை தொடா்ந்து ஆளுனரால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவா் , இரணைமடுக்குளத்தின் முகாமைத்துவம் தொடா்பில் முகநுாலில் விமா்சனம் முன்வைத்தமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.