எங்களை யானைகளிடம் இருந்து பாதுகாத்து தாருங்கள் மருதோடை மக்கள்

எல்லையை பாதுகாக்கும் எங்களை யானைகளிடம் இருந்து பாதுகாத்து தாருங்கள் மருதோடை மக்கள்
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு!!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

 இன்று(30.12.2018) மருதோடை பாடசாலையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,முன்னாள் மாகாணாசபை உறுப்பினர்தியாகராசா,வவுனியாவடக்குபிரதேச சபை உறுப்பினர்  தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் நிவாராண பணிக்கான நிதி உதவியை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) பிரித்தானியா கிளை கட்சி தோழர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர் அவையாவன

1.வெள்ளத்தால் மிகவும் மோசமாக பதிக்கப்பட்ட மருதோடை-காஞ்சிரமோட்டை வீதி (3KM) திருத்தம் செய்யப்பட வேண்டும்

2.எமது அத்தியாவசிய தேவையான குடிநீர்,மின்சாரம் என்பவற்றை பெற்று தரவேண்டும்.

3.மீளக் குடியேறிய நாம் தற்போது வரைக்கும் தற்காலிக வீடுகளிலே குடியிருக்கின்றோம். இருந்தும் நாம் தினம் தினம் யானையின்  அச்சுறுத்தல்களுக்கும் அழிவிற்கும் மத்தியிலே வாழ்ந்து வருகின்றோம். தற்போது எட்டு தற்காலிக வீடுகளை யானை தகர்தெறிந்துள்ளது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாடாக எங்களுக்கு மின்சார வேலி அமைத்துதரவேண்டும்.

4.பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக இயங்கிவந்த பேருந்து சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது இதன்காரணமாக இதுவரைகாலமும் பிரயாண பருவகாலசீட்டுடன் சென்றுவந்த பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் 40 ரூபா கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்லவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பல மாணவர்கள் தங்கள் கல்விநடவடிக்கையை தொடரமுடியாமல் உள்ளனர் எனவே இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பித்தல்.

5.பத்து கிலோ மீற்றர் தூரம் சென்றே வைத்திய நடவடிக்கை மேற்கொள்கிறோம். மருதோடை ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தை திருத்தி வழங்குவதன் மூலமும் வாரத்தில் ஒருநாள் நடமாடும் சேவை மேற்கொள்வதன் மூலமும் எமது கிராம மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்தல்

6. குடியிருப்பதற்குரிய காணியை தவிர்த்து ஏனைய நிலங்களை துப்பரவு செய்வதற்கு வன பரிபாலன திணைக்களம் தடை விதிக்கின்றது. இவ் திணைக்களத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துதல்.

7.எமது கிராமமான காஞ்சிரமோட்டையில் அதிகளவான மக்கள் தின கூலி வேலை செய்தே தங்கள் வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர் எமக்கு நாவலர் பண்ணை வயல் காணிகளை பகிர்ந்து வழங்குவதன் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

போன்ற பல கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர். மேலும் மாவட்ட,பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில்  வனபரிபாலன திணைக்களத்தினால் மீள் குடியேறிய மக்கள்ளுக்கெதிரான செயற்பாடு தொடர்பாக பலதடவைகள் தீர்மானங்கள் எடுக்கப்பட்டும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும்
 குறிப்பிடத்தக்கது.மேற்குறிப்பிட்ட
பிரச்சனைகள் யாவும் வவுனியா அரசாங்க அதிபாின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.