டேவிட் கம்ரூன் - மைதிரி

வெறும் 3.8 வீதமான மக்கள் தனது
கொள்கைக்கு எதிராக வாக்களித்தமையால்  பிரதமர் பதவியை இராஜினாமம் செய்தார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கம்ரூன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என 48.1 சதவீதம்  பேரும், விலக வேண்டும் என  51.9 சதவீதம்பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.

டேவிட் கம்ரூன் பிரித்தானிய தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில்  நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால் மக்களின் தீர்ப்பு தனது கொள்கைக்கு எதிராக வெளிப்பட்மையால்

பிரித்தானிய நாடு என்ற கப்பலுக்கு கப்டனாக இனி நான் நீடிப்பது சரியாக இருக்காது. தேசத்தின் நலனிற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தான் சரியான முடிவு’ என பிரதமர் கம்ரூன் உருக்கமாக தெரிவித்து கடந்த 2016 யூன் மாதம் தனது பதவியை இராஜினாமம் செய்தார்.

இதுதான்  பிரித்தானிய அரசியல். டேவிட் கம்ரூனின் அரசியல் நாகரீகம்

ஆனால் நாட்டின் தாய் சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தையே  நாட்டின் முதற் குடிமகனான ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மீறிவிட்டார்  ஆதாவது ஜனாதிபதி குற்றம் புரிந்துள்ளார் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  வெளியிட்ட பின்பும். நம் நாட்டு ஜனாதிபதி  அந்த கதிரையில் எவ்வித குற்ற உணர்வும் இன்றி இருக்கின்றார்.

இதுதான் இலங்கை போன்ற கீழத்தேய நாடுகளின் கீழ்த்தரமான அரசியல், பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற  இலங்கை  அந்த நாட்டிடம் இருந்த பல நல்ல விடயங்களை கற்றுக்கொள்ளவில்லை.

மன்னன் இவ் வழியென்றால் மக்கள்......?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.