விராட் கோலிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் திரிசூல வியூகம்!

வருகிற 6-ந்தேதி, ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் அடிலெய்டில் துவங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடியபோது தொடரை 0-2 என இழந்தாலும் விராட் கோலி அபாரமாக செயல்பட்டார். நான்கு சதங்களுடன் மொத்தம் 692 ரன்கள் சேர்த்தார். சராசரி 86.50 ஆகும்.


விராட் கோலி அதிலிருந்து இதுவரை நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏராளமான சாதனைகளை உடைத்தெறிந்த விராட் கோலி தற்போதும் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எங்களுடைய மும்மூர்த்திகள், விராட் கோலியை கட்டுப்படுத்துவார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆன டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.
இது பற்றி டிராவிஸ் ஹெட் தெரிவிக்கையில்''எங்களுடைய பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இதற்காக எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இவர்களால் போதுமான அளவு விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இந்த உலகத்தில் எல்லோருமே மனிதர்கள்தானே.


எங்களுக்கு, விராட் கோலி சிறந்த வீரர் என்பது தெரியும். அவர் மிகவும் சிறப்பான வீரர். ஆனால் நாங்கள், அவர் வீழ்த்தும் அளவிற்கான பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள். நாங்கள் இந்தியாவை வீழ்த்தி போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று தெரிவித்தார் 
Powered by Blogger.