3 மாதங்களுக்கு வர்த்தகப் போரை நிறுத்த அமெரிக்கா- சீனா ஒப்புதல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன இறக்குமதிகள்மீது விதித்த வரிகளை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் வர்த்தகப் போரை, 3 மாதங்களுக்கு நிறுத்த இரு நாடுகளுக்கும் ஒப்புதலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


சீனபொருட்களின் இறக்குமதிகளால் அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைவதாக கூறி, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது கூடுதல் வரிகளைவிதித்து உத்தரவிட்டார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது வரிகளை விதித்தது.

கடந்த சில மாதங்களில், இரு நாடுகளும் இடையே வர்த்தகப் போர் மூண்டு, புதிய பொருட்கள் மீது கூடுதல்வரிகளை மாறி மாறி விதித்து வந்தனர். ஜனவரி 1ம் தேதி முதல் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனஇறக்குமதிகள் மீது 25% வரி சுமத்தப் போவதாகட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த கூடுதல் வரிகள் அமெரிக்க மக்கள் மீது வந்து விழும் என்பதால், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு, அவரது அரசிலேயே கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையைதொடர்ந்து, இரு தலைவர்களும் புதிய வரிகளை எதையுமே விதிக்கப்போவதில்லை என ஒப்புதலுக்கு வந்தனர். 90 நாட்களுக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை கூடுதல் வரிகள் விதிக்கப் போவதில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.