யாழ். கொழும்புத்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் வாள்வெட்டுக்குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதலின் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் வாயிற்கதவு ,  வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்ற பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்களை வாளால் சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna

No comments

Powered by Blogger.