முகாம் இல்லாததால் சுடுகாட்டில் சமைத்து உண்ணும் மக்கள்



திருத்துறைப்பூண்டி தாலுக்கா முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட 36 குடும்பத்தினர் வீடு இல்லாததால்
சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.


தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.



தமிழக அரசு தீவிரமாக நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி தாலுக்கா முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட 36 குடும்பத்தினர் வீடு இல்லாததால் சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். பின்னத்தூர் ஊராட்சி தெற்கு ஜீவா தெருவில் உள்ள 120 க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் கஜா புயலால் முற்றிலும்சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதான சாலையில் உள்ள சுடுகாட்டில் தஞ்சமடைந்து அங்கேயே சமைத்து உண்டு வருகின்றனர்.



முகாம் அமைத்து தராததால் சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இவர்களின் வீடுகளை சீரமைத்து
தர வேண்டும் என்றும் அதுவரை தங்க சமுதாய கூடம் அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.