தென்னை கன்றுகளில் மிக பெரிய ஏமாற்று வேலை

தென்னை கன்றுகளில் மிக பெரிய ஏமாற்று வேலை நடக்க துவங்கியுள்ளது
விபரம் நன்கு தெரிந்தவர்கள் தெளிவாக பதில் தரலாம்

நம் பகுதியில் புயல் பாதிப்பால் 80 வருடங்களுக்கு முன்பு வைத்த பல தென்னைகூட அடியோடு சாய்ந்துவிட்டது
மீண்டும் புதிய தென்னை கன்றுகள் தேர்வு செய்வதில் மிக பெரிய குழப்படி நடந்து வருகிறது
புயலுக்கு முன் பாரம்பறிய நாட்டு ரக தென்னை கன்று ஒன்று 70 ரூபாய் விலையில் கிடைத்தது குட்டை ரகம் 150க்கு கிடைத்தது
ஆனால் இன்று சாதரண நாட்டு தென்னை கன்று 150 எனவும்
குட்டை ரகம் 300 முதல் 500 வரை விற்கபடுகிறது
பலரின் சந்தேகம் இதுதான்
குட்டை ரகம் எத்தனை வருடம் காய் தரும்
முதலில் அதிக காய் உற்பத்தி வந்தாலும் பின்நாளில் காய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள் எது உண்மை
தற்போது நமக்கு தேவை வருமானத்திற்கான வழி இதனால் தென்னையில் எதனை தேர்வு செய்வது பாரம்பரிய ரகமா குட்டை ரகமா
கேரளா மாநிலம்
ஆந்திரா மாநிலம்
அந்தமான் அங்கிருந்து முறையாக 15 ஆயிரம் தென்னம்பிள்ளைகள் பெற எங்கு தொடர்புகொள்ளனும் என்பதை பற்றி தெரிந்தவர்கள் பதில் தரலாம்
குறிப்பு தென்னை ஆராய்ச்சி மையம்
தென்னை வளர்ப்பு மையம் என பல இடங்களில் புற்றீசல்போல புதிதாக தொடங்கி பல ரக கன்றுகளை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர் விவசாயிகள் எச்சரிக்கையாக வாங்கி பயன்பெற வேண்டுகிறேன்
தகவல்
கீரமங்கலம் சிகா லெனின்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.