முக்கிய தீர்மானத்தை வெளியிட்ட ஐ.தே.க..!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐ.தே.க இந்த முடிவை எடுத்துள்ளது.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #UNP #Sajith piremathasa


No comments

Powered by Blogger.