அரச நிறுவனங்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடு…. !

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகள் உட்பட சகல அரச நிறுவனங்களின் வைபவங்களை நடத்த ஆடம்பர ஹொட்டல்களை பயன்படுத்த விதித்து அரச சுற்றறிக்கை அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு சொந்தமான மண்டபங்கள், நிறுவனங்கள் இருக்கும் போது அதிகமான பணத்தை செலவிட்டு ஆடம்பர ஹொட்டல்களில் நடத்தப்படும் வைபவங்களால், செலவாகும் வீண் விரயத்தை தடுக்கவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் சுற்றுலா ஹொட்டல் உரிமையாளர்களை பழிவாங்குவதற்காகவே ஜனாதிபதி இந்த அவசர சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு ஷெங்ரீலா ஹொட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெறவிருந்த சுற்றுலா விருது வழங்கும் விழாவை பகிஷ்கரிக்க சுற்றுலா தொழிற்துறையை சார்ந்த ஹொட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதனால், இந்த விழாவில் கலந்துக்கொள்ளாத ஜனாதிபதி நேற்று மாலை இந்த சுற்றறிகையை வெளியிட்டுள்ளார்.நாட்டில் அரசியல் நெருக்கடி, அரசியலமைப்பு சூழ்ச்சியை உருவாக்கி, சுற்றுலா தொழிற்துறை முற்றாக வீழ்ச்சியடைய வழிவகுத்து, இந்த நிலைமைக்கு முழுமையான பொறுப்புக் கூற வேண்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ள போவதில்லை என சுற்றுலா தொழிற்துறையை சார்ந்த ஹொட்டல் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விருந்து வழங்கும் விழாவுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியை அழைத்திருந்தமை தொடர்பில் ஹொட்டல் உரிமையாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
Powered by Blogger.