தமிழ் மக்கள் பேரவை பொதுக் கொள்கையொன்றைவகுக்க தீர்மானம்

தமிழ் மக்கள் பேரவை பொதுக்
கொள்கை ஒன்றை வரையறுத்துச்செயற்படுவதென பேரவையின் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பேரவையின் இணைத்தலைவர்களான வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன், வைத்தியக் கலாநிதி லக்ஸ்மன் மற்றும் வசந்தராசா தலைமையில் யாழப்பாணம் பலாலிவீதியின் கந்தர் மடம் சந்தியிலுள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் டிசெம்பர் 9ஆம்திகதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில்கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பின் போது தமிழ் மக்களின் பேரவையின் உறுப்பினரான க.அருந்தவபாலன் கருத்துத்தெரிவிக்கையில், பேரவையின் கடந்த கூட்டங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னப்பலத்தால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தவிசேட கூட்டம் கூடட்ப்பட்டதாக தெரிவித்தார்.
இந் நிலையில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதீர்மானத்திற்கு அமைவாக சம்மந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து விளக்கங்களும் கோரியதன்அடிப்படையில் இன்றையதினம் அது தொடர்பாக ஆராயப்பட்டு பொது இணக்கப்பாட்டுக்குஏகமனதாக தமிழ் மக்கள் பேரவை வந்துள்ளதாகவும் அருந்தவபாலன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்மக்களைப் பிரதிநிதிததுவப்படுத்துகின்ற கட்சிகள் இயங்குகின்ற தன்மை தொடர்பாக ஒருபொதுக் கொள்கையை வரையறுக்க வேண்டுமென்றும் இன்றையக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவ்வாறான கொள்கைகள் இல்லாத காரணத்தினால்நடைமுறை சார்ந்த சில பிரச்சனைகள் உருவாகியிருப்பதை உணர்ந்து கொண்ட பேரவை உறுப்பினர்கள் அவ்வாறானஒரு கொள்கையை உருவாக்கி எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாத வகையில்தமிழ் மக்கள் பேரவையை மிக இறுக்கமான கட்டுக் கோப்புடன் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைஅடைவதற்காக முன்கொண்டு செல்வது தொடர்பாக விலாவாரியாக ஆராயப்பட்டதாகவும்அருந்தவபாலன் தெரிவித்தார்..
இதற்கமைவாகவே தமிழ் மக்கள் பேரவைக்கு பொதுக் கொள்கைவரையறுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், அதனடிப்படையில் மிக விரைவில்அவ்வாறான கொள்கையை வரைந்து பேரவையில் எல்லோருடைய அங்கிகாரத்தையும் பெற்று அதன்பின்னர் அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென்றும் முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறு வகுக்கப்படும் பொதுக் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொருஉறுப்பினர்களும் அவர் கட்சி சார்ந்தவராகவும் இருக்கலாம் அல்லது கட்சிசாராதவராகவும் இருக்கலாம் அவர்கள் அந்தக் கொள்கையில் இருந்து விலகாதவராகவும்அந்தக் கொள்கைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டுமென்று ஏகமனதாக ஒருமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அருந்தவபாலன் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.