நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரம்பேசலில் மைத்திரிக்கும் பங்குண்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என பண்டாரகமவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜித் பீ பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் ஒருவருக்கு 500 மில்லியன் ரூபாய் வரையில் பேரம் பேசப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குழுக்களாலேயே குறித்த விலை நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் நாட்டில் ஜனநாயகத்தை மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அஜித் பீ பெரேரா அழைப்பு விடுத்திருந்தார்.
அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மஹிந்த ராஜபக்ஷ நாட்டை ஆளுவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்றும் அஜித் பீ பெரேரா கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.