யேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை

யேமன் அரச தரப்பினர் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
போர்க்குணமிக்க தரப்பினருக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
இருந்தபோதும், இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு பெரிய முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்று கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் சர்வதேச தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய, யேமனுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜெரால்ட் ஃபெய்யெஸ்டெய்ன் கருத்து வௌியிடுகையில், சமாதான பேச்சுவார்த்தைகள் என்று அழைக்கப்படுவது, எந்த தருணத்திலும் அமைதிப் பேச்சுவார்த்தையாக அமையாது என்று குற்பிட்டுள்ளார்.
“இந்த சுற்று பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எதிர்பார்ப்புகளை விடவும், சிறிது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் சரியானது.” என்று அவர் குறிப்பிடடுள்ளார்.
அவற்றில் பல சந்திப்புகள் பேச்சுவார்த்தைகளாக இல்லை, ஆனால் ஆலோசனைகளாக உள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.
“இரண்டு தரப்பினரும் நேருக்கு நேராக சந்திப்பதில்லை, ஆனால், அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு உண்மையில் மூத்த பிரதிநிதிகள் போதுமான அளவில் இல்லை” என்று யேமனுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜெரால்ட் ஃபெய்யெஸ்டெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.