சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் மஹிந்த திருமணத்தில் பதிவு

பேருவளையில் நேற்று இடம்பெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றன.


நல்லிணக்கிற்காக முஸ்லிம் பெண்ணை மஹிந்த திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், கடந்த ஒன்றரை மாதங்களாக செயற்பட்டு வருகின்றன.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Mahinda  #Face book #Wedding


No comments

Powered by Blogger.