மைத்திரிக்கு எதிராக சந்திரிக்கா!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறப்பு மாநாட்டினை கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான சந்திரிக்கா புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் சந்திரிக்கா குறித்த மாநாட்டினை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசமைப்புக்கு முரணாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாலும், மஹிந்தவுடன் நெருக்கமான உறவை பேணுவதாலும் சந்திரிக்கா கடும் சீற்றத்தில் உள்ளார்.

தனது ஆசியுடன் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, தன்னிச்சையாக செயற்படுவது கவலையளிப்பதாக சந்திரிக்கா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.இதன்காரணமாகவே அவர் மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Maithiri  #Chandarika

No comments

Powered by Blogger.