மன்னாரில் மின்சார சபை பணியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள்

மன்னார் சாந்திபுரம் கிராம வீடுகளில் காணப்படும் தென்னை மரங்களை வெட்ட முயன்ற இலங்கை மின்சார சபை பணியாளர்களுக்கு பொதுமக்கள் தம்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


மன்னார் சாந்திபுரம் கிராமம் ஊடாக செல்லும் அதி உயர் மின் கம்பிகளை சீர் செய்ய அங்குள்ள சில தென்னை மரங்களை வெட்ட மின்சார சபையினர் இன்று (சனிக்கிழமை) நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், இதற்கு சாந்திபுரம் கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மரங்களை வெட்டும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

ஆனால், தென்னை மரங்கள் சிலவற்றை இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் பலவந்தமாக வெட்டியுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் நகர சபையின் தவிசாளர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சாந்திபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், 7 தினங்களுக்குள் வீட்டு உரிமையாளர்கள் தென்னை மரங்களை வெட்டி அகற்றாது விட்டால் இலங்கை மின்சார சபை பணியாளர்கள் அதனை அகற்றுவார்கள் என ஏற்கனவே வட பிராந்திய மின்சார சபை அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.