தேரருக்கு மனோ கொடுத்த பதிலடி என்ன?

நாட்டில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மனோகணேசன் போன்றோர் ஆகாயத்தில் வசிக்கும் தமிழர்கள் எனவும், அவர்களுக்கு இங்கு இடமில்லை எனவும் கூறிய எல்லே குணவன்ச தேரரின் உரைக்கு, 'நான் இந்த நாட்டில்,
கொழும்பில், தரையில் கால் பதித்து இருக்கும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் பேசும் இலங்கைவாழ் தமிழன் தேரரே" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.'தமர அமில என்ற பெயரை மாற்றிப்பார்த்தால் அதன் பொருள் ஆகாயம் என்றும், தமிழ் என்றும் வருகின்றது.

தமர அமில தேரர் என்பவர் ஆகாயத்தில் இருக்கும் தமிழராவார். சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மனோகணேசன் போன்று ஆகாயத்தில் இருக்கின்ற தமிழர் தான் தமர அமில தேரர்.

அவர்களைப் போன்றவர்கள் எமக்குத் தேவையில்லை. முரளிதரன் போன்று நிலத்தில் வாழும் உண்மை தமிழர்களே எமக்கு அவசியமானவர்கள்.

அவர்களுடன் இணைந்து எமது பயணத்தைத் தொடர நாம் தயாராக இருக்கின்றோம்.

 ஆகாயத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கு இங்கு இடமில்லை. ஆகாயத்தில் பறந்து செல்வதொன்றே அவர்களுக்கு இருக்கின்ற தெரிவாகும் என எல்லே குணவன்ச தேரர்  கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(நா.தனுஜா)

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Mano #Sampanthan #Sumanthiran #Thera

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.