பொலன்னறுவை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலா ல் 10 பேர் உயிரிழப்பு

பொலன்னறுவை மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் கடந்த 3 வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் சரத் ஜெயசிங்க இன்று தெரிவித்துள்ளார்.


அதேநேரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராம மட்டங்களில் அதிகமாக இத்தாக்கம் உள்ளதாகவும் குறிப்பாக விவசாயிகள் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.