கதாநாயகியாக பிரியாமணி ஆர்.ஆர்.ஆர் படத்தில்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதற்கு நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படம் அவருக்கு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமெனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் நாயகி இன்னும் தெரிவு செய்யப்படாத நிலையில் பிரியாமணி நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

No comments

Powered by Blogger.