ஜனாதிபதிக்கு நீதியே பதிலடியினை வழங்க வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தான்தோன்றித்தனமான  செயற்பாட்டிற்கு  நீதியே  பதிலடியினை வழங்க வேண்டும்.  தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு  நீதிமன்றம் உரிய தீர்வு வழங்கியுள்ளமை  வரவேற்கத்தக்கது  என கொழும்பு  மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க  தெரிவித்தார்.அரசியலமைப்பினை  பாதுகாக்கும் முகமாக விகாரமாதேவி பூங்காவிற்கருகில்  கடந்த 14 நாட்களாக இடம்பெற்று வரும் தொடர்  சத்தியாகிரக போராட்டத்தில்  நேற்று  கலந்துக் கொண்டு கருததுரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

ஜனாதிபதி பழிவாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.

 அந்த வகையில்  தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகளின் பொருட்டு  பழிவாங்கும் செயற்பாடு தளைத்தோங்கும்  நிலையை காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய நிலை  நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்வேண்டுமென அவரது உரையாடலின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Maithiri  #Rosi Senaykka

Powered by Blogger.