வில்லனாக மாறிய ஸ்ரீகாந்த்

ரோஜா கூட்டம் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என்ற வெற்றி படங்களில் நடித்தார். தற்போது தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில் உருவாகும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள ஹாசிம் மரிக்கர் இப்படத்தை இயக்கி உள்ளார். 

டம் பற்றி அவர் கூறும்போது ‘படத்தில் ஸ்ரீகாந்துடன் லெனா, மக்பூல் சல்மான், சந்திரிகா, காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு கதை தான் தேவை. இந்த படத்தில் அது இருக்கும். படத்தின் பெயர் தான் காதல் சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் படத்தில் காதல் பற்றி ஒன்றும் இருக்காது. 
உச்சபட்ச திரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகன் தான். அது ரியாஸ்கான் மட்டும் தான். அவரை தவிர மற்ற அனைவரும் வில்லன்கள் தான். இப்படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதுமையான முயற்சிகளை கையாண்டிருக்கிறோம். தமிழ் படங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் தமிழுக்கு வருகிறேன்’ என்றார்.

No comments

Powered by Blogger.