“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி

நவீன விவசாய கலாசாரமொன்றை

உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி இன்று (11) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று முதல் 16ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி பொது மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படுவதுடன், கண்காட்சி கூடங்கள் உணவு, பழவகைகள், மரக்கறி வகைகள், விற்பனைப் பிரிவுகள் ஆகிவற்றை உள்ளடக்கியுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு விவசாய துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளதுடன், விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழிநுட்ப முறைமையை இலங்கை விவசாய சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வியை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.

கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், பணிக்குழாமினருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க மற்றும் விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.