யாழ் போதனா வைத்திய சாலையில் நடைக்கும் முறைகேடுகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நடக்கும் பெருமளவு கேவலங்கள் மூடிமறைக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளி மருந்தகங்களில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்ட வலி
மாத்திரைகள் குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் போதை மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றனவாம். அந்த மாத்திரகைள் கடும் போதையைக் கொடுப்பதாகவும் அதனை குறித்த ஊழியர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு விலைக்கு விற்பதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் சட்டவிரோதமான முறையில் கருத்தரித்து வரும் யுவதிகள் மற்றும் சிறுமிகளை மிக ரகசியமாக வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளித்து வெளியேற்றிவிடுகின்றனர். இவ்வாறான சிறுமிகள் யுவதிகளின் பெற்றோரிடம் பெருமளவு பணமும் பெற்றுவிட்டே இவர்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்து வருகின்றனர். அத்துடன் அவர்களின் அழகான பெண்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி வைத்து அவர்களை வேறு இடங்களுக்கு வரவழைத்து தமது லீலைகளை நடாத்தி வருவதாகவம் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சட்டவைத்திய அதிகாரி சில சம்பவங்களை மூடி மறைத்து வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களில் உள்ள நேர்மையான சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் 4 வயதுச் சிறுமி அவளது தாயின் கள்ளக்காதலனால் கொடுமையான முறையில் பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் வரும் அளவுக்கு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள். அந்தச் சம்பவம் வைத்தியசாலையின் சட்டவைத்தியஅதிகாரியால் திசை திருப்பப்பட்டு நீதிமன்றத்துக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயுடன் சட்டவைத்திய அதிகாரி நெருங்கிய தொடர்பை தற்போது பேணி வருவதாகவும் அந்தச் சிறுமியின் தாய் அடிக்கடி சட்டவைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் வைத்தியசாலைத் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த 4 வயதுச் சிறுமி கொடூரமாக வல்லுறவுக்கு உள்ளாக்கிய விடயத்தையே மூடிமறைக்குமளவுக்கு செயற்பாடுகள் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டிந்தால் மேலும் எவ்வளவு நடவடிக்கைகள் குறித்த அதிகாரி மூடி மறைத்திருப்பார் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு வலுத்துள்ளது.

குறித்த 4 வயதுச் சிறுமியும் தாயாரும் தாயாரின் தாயார்( அம்மம்மா) ஆகியோர் வசாவிளானில் இராணுவ முன்னணி காவலரண்களுக்கு அருகிலேயே வசித்து வருவதாகவும் அவ்வாறான நிலையில் குறித்த சிறுமியையும் தாயாரையும் இராணுவத்தில் உள்ள அதிகாரி ஒருவரே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகவும் அதனால் தான் ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டால் இராணுவத்தால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என குறித்த சட்டவைத்திய அதிகாரி பயப்படுவதாகவும் சட்டவைத்திய அதிகாரி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சட்ட வைத்திய அதிகாரி அந்த பெண்ணிடம் இருந்து ( சிறுமியின் தாய்) பாலியல் லஞ்சம் பெற்றுவிட்டு இவ்வாறா சாட்டுப் போக்குகளைச் சொல்வதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதே நேரம் சிறுமி கொடூரமாக சிதைக்கப்பட்டதை வெளிப்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 21ம் வார்ட்டில் இருந்து அந்த வார்ட்டின் பொறுப்பதிகாரியான குருபரனால் ஒரு தாதி வேறு வாட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமியை சிதைத்தவன் யார் என்பதை அறிய முற்படாது தகவல்களை வெளியிட்டவர்களை அறிய முற்படும் கேவலம் மிகுந்த நடவடிக்கைகளை குறித்த வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் எடுத்து வருகின்றார்கள்.

குறித்த வைத்திய அதிகாரிகளுக்குப் பெண் குழந்தைகள் இருந்தால் அக் குழந்தைகள் மீது இவ்வாறான கொடுரம் நடந்தால் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும்.

இந்த சிறுமி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காரணத்தால் இன்று முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் தொலைபேசிப் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சகலதுறை உத்தியோகஸ்தர்களும் ஸ்மாட் வகை தொலைபேசிகளை உபயோகிப்பதை முற்றாக நிறுத்துமாறு உள்ளக நடைமுறை ஒன்றை இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை சகல உத்தியோகஸ்தர்களிற்கும் கடந்த மாதம் 25 ம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் ஊழியர்கள் மட்டத்தில் இது தொடர்பாக பல முணுமுணுப்புக்கள் மறைமுகமாக நிகழ்ந்தாலும், நோயாளிகள் மட்டத்தில் இவரது செயற்பாடு பாரிய வரவேற்பை பெற்றுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.