Samsung Galaxy S10 யின் எக்ஸரிஸ் மற்றும் விலை

Samsung Galaxy S10 லேட்டஸ்ட் சீரிஸ் கொண்டு நிறைய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் Galaxy S10 சீரிஸ் கொண்டு லீக் ரிப்போர்ட் வெளியே வந்துள்ளது. இந்த லீக் யின் படி சாம்சங் கேலக்சி S10 சீரிஸின் கீழ் மூன்று வகையை கொண்டுவந்துள்ளது மற்றும் இதன் அனைத்து விலைகளும் லீக் ஆகியுள்ளது இதனுடன் இதன் சில விவரங்களும் இங்கே வெளிவந்துள்ளது


அதன்படி கேலக்ஸி S10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2019 மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன், அதாவது பிப்ரவரி 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்சமயம் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அதே நாளில் துவங்கி, மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி S10 ஸ்மார்ட்போன்கள்: வழக்கமான மாடல், பிளஸ் மற்றும் ஃபிளாட் என மூன்று வித வேரியன்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இவற்றில் வழக்கமான 3.5 mm . ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ போன்றே கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனிலும் மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்கிரீன் அளவுகளை பொருத்த வரை கேலக்ஸி எஸ்10 மாடலில் 6.1 இன்ச், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் மற்றும் ஃபிளாட் வெர்ஷனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கேலக்ஸி எஸ்10 ஃபிளாட் வெர்ஷனில் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என்றும் இதன் விலை 669 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.60,730) என தெரிகிறது.

இதேபோன்று 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி எஸ்10 வழக்கமான வளைந்த எடிஷன் 128 ஜி.பி. அல்லது 512 ஜி.பி. என இருவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இவற்றின் விலை முறையே 799 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.72,517) என்றும் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.90,668) என கூறப்படுகிறத

#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.