வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் ஊடகசந்திப்பும்,நிர்வாக பொதுக்கூட்டமும் நடைபெற்றது இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடகபேச்சாளர் கே.தேவராசா 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் உறுப்பினர்களையும் இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோல் விடுத்ததாகவும் அதன் பிரகாரம் அவர்களை அளைத்து பொதுக்கூட்டத்தை நடத்தினோம் .

வவுனியா மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கபட்டவர்களிற்கான நிர்வாக பொது கூட்டம் பல ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கபட்டிருந்தாலும் ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதிகள் ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளிற்காக காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்களை பயன்படுத்தி வருகின்றனர் அவ் நடவடிக்கைகளுக்கு நாம் தயாரில்லாத நிலையில் புதிதாக ஒரு கட்டமைப்பை கடந்த வருடம் உருவாக்கியிருந்தோம். எமது சங்கத்தின் தலைவியான சரஸ்வதி மீது அவதூறுவார்தைகள் பிரயோகிக்கபட்டுள்ளமையால் தனது பதவியைவிட்டு விலத்துவதாக தீர்மானித்து பொதுச்சபையை கூட்டுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தார்.


 அதற்கமைய நேற்றயதினம் பொதுச்சபை கூட்டப்பட்டு அவர்பதவிவிலகியமையால் புதியநிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யபட்டுள்ளது. அதன் தலைவியாக சறோயினிதேவி தெரிவு செய்யபட்டுள்ளார். வடகிழக்கில் அமைந்துள்ள சங்கத்தினரை அழைத்தே எமது நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளோம். காணாமல் ஆக்கபட்டவர்களின் குரலாக எமது அமைப்பு சர்வதேசரீதியாகவும், உள்நாட்டிலும் சரியான முறையில் எமது நகர்வுகளை முன்னோக்கி நகர்தும் என்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து வருவார்களாக இருந்தால் அனைவருடனும் இணைந்து நாம் செயற்பட தயாராகஇருக்கின்றோம்.


 எமது சங்கம் எப்போதும் தனித்துவமாக இருக்கும் ஏனைய மாவட்டங்களில் இயங்கும் சங்கங்களோடு ஒப்பிட முடியாது வடகிழக்கில் காணாமல் ஆக்கபட்ட எமது உறவுகளின் நடவடிக்கைகளை பலபடுத்திக்கொண்டு போகின்றபோது அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் ஒன்றுக்கும் உதவாததாக அமைந்துள்ளது.


 அதேவேளை காணாமல்ஆக்கபட்டோர்தொடர்பான விடயத்தை காணாமல் ஆக்கபடுவதற்கு யார்காரணியாக இருந்தார்களோ அவர்களால் நியமிக்கபடும் ஆணைக்குழுக்கள் மூலம் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வுகள்கிடைக்கபோவதில்லை என்று தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.