எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு


எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெலியத்த – கெடமான்ன பகுதியில் அதிவேக
மார்க்கத்தில் கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளார். எரிவாயு சிலிண்டரை வெட்ட முயற்சித்த வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தங்காலை – தோர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நுவரெலியா – ராகலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.