வாகனங்களுக்கான காபன் வரி செலுத்துவது தொடர்பில் நிவாரண நடைமுறை


வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காபன் வரியை செலுத்தும்போது, இந்த வருடத்தில் நிவாரண நடைமுறையொன்றை பின்பற்ற மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, குறித்த காபன் வரிக் கட்டணத்தை இந்த வருடத்தில் எந்தவொரு நாளிலும் செலுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் காபன் வரியை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.