சிலாபத்தில் உணவு விசமடைந்ததில் 31 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு


சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தில் உள்ள தோட்டமொன்றில் வளர்க்கப்பட்ட 31 செம்மறி ஆடுகள், உணவு
விசமடைந்தமையால் உயிரிழந்துள்ளன. குறித்த பெருந்தோட்ட நிறுவனத்தின் தொழிலாளர்கள், சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவு என்பன வழங்கப்படவில்லை என தெரிவித்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 3 நாட்களாக குறித்த தோட்டத்திலுள்ள செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதேவேளை, ஏனைய ஆடுகளும் உயிரிழக்கும் தருவாயில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கும்போது, தோட்ட முகாமையாளரால் முறையற்ற விதத்தில் ஆடுகளுக்கு உணவு வழங்கியமையாலேயே அவை உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உணவு வழங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை காரணமாகவே செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளதாக, பிங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ.ஏ.எஸ். ரசிகாவும் உறுதி செய்துள்ளார்.
Powered by Blogger.