அளம்பில் துயிலும் இல்லத்தை சிங்க ரெஜிமென்றால் ஆக்கிரமிக்க எடுத்த நடிவடிக்கை மக்களால் முறியடிப்பு

முல்லைத்தீவு அளம்பில் துயிலும் தாயகத்தின் துயிலும் இல்லங்களில் முதன்மையானது.அதில் ஆரம்பகால மூத்த போராளிகள் பலர் விதைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் கொக்குளாய் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பல கிராமங்களின் மாவீரர்கள் அங்கு விதைக்கப்பட்டுள்ளர்.
அத்தகைய தமிழர்களின் காவல் தெய்வங்களான மாவீரர்களின் புனித தலத்தை சிங்கரெஜிமென்றுக்காக நில அளவை திணைக்களத்தால் அளவை செய்ய இன்று எடுக்கப்பட்ட நடிவடிக்கையை அளம்பில் வாழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுசரணையுடன் ஒரு ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான மிகமோசமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை மக்களை கொதிப்படையவும் கவலையும் கொள்ளவைத்துள்ளது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மக்கள்

அளம்பில் துயிலும் இல்லம் எமது வணக்க தலம்.அது எங்களின் சொத்து.எமது பிள்ளைகள் அங்கு உறங்குகின்றார்கள்.நாம் அங்கு பூவைத்து கண்ணீர் சிந்தி ஆறுதல் அடைகின்றோம்.அதை ஆக்கிரமிப்பதை விடுத்து அதை எங்களுக்கு சட்டவரையறைக்கு அமைவாக உரிமையானதாக மாற்றி தருமாறு வேண்டுகின்றோம்.அதை விடுத்து எங்கள் புனித வணக்க இல்லத்தை ஆக்கிரமிக்க ஒருபோதும் விடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இன்றைய இந்த எதிர்ப்பு போராட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா பிரசன்னமாகியிருந்ததுடன் விடயத்தை மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி அளவை நடிவக்கையை நிறுத்த துணை செய்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.