வவுனியாவில் திரையரங்கில் மோதல்

வசந்தி திரையரங்கில் அடிதடி, பலர் காயம்.

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வசந்தி சினிமா திரையரங்கில் இன்று இரவு இடம்பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தென்இந்திய திரைப்படநடிகரான அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள “விஸ்வாசம்” படத்தை காண்பதற்காக இன்று இரவு 9 மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.
திரைப்படத்தை காண்பதற்கான நுளைவுசீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது வாக்குவாதமாக உருவெடுத்து அடிதடியாக மாறியது.
குறித்த சம்பவத்தில் சினிமா பாணியில் மது போத்தல்கள், தலைகவசங்களால் குழுக்களாக பிரிந்து  இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர்.இதனால் கண்டிவீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.சம்பவத்தில் பலர் காயமடைந்தபோதும் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அவசர  இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிசாருக்கு தெரியபடுத்தியபோதும் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே 30நிமிடங்களுக்கு பின்னரே பொலிசார் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து வாகனத்தில் வந்தும் வாகனத்திற்குள்ளேயே இருந்துவிட்டு அப்படியே திரும்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.