யாழ் மாநகர எல்லைக்குள் மீற்றர் இல்லாத முச்சக்கரவண்டிக்கு தடை!


மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகள் எவையும் யாழ் மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் சேவையில் ஈடுபட முடியாது என்று மாநகர முதல்வர் இ.ஆனால்ட் அறிவித்துள்ளார். மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள் என்று மாவட்டச் செயலக கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019.02.01 இலிருந்து யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் இடத்தூரக் கணிப்பு பொறிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பொறிகளைப் பொருத்தாத மாநகர எல்லைக்குற்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.