தேரர்கள் பேசாமல் இருக்க மாட்டார்களே! பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிட்டன!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதிய அரசியல் அமைப்பிற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அந்த சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை  சந்தித்த தேசிய இணக்க சம்மேளனம் இந்த கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பும் - முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவர இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் பிரச்சினைகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டது. நந்திக்கடல் யுத்தமே அவர்களுக்கான தீர்வு.

இப்போது புதிய தீர்வுகளை கூறிக்கொண்டு சுமந்திரன் போன்றவர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த முயற்சிகள் இலங்கையின் முயற்சிகள் அல்ல.

சர்வதேசத்தின் முயற்சிகள். ஆகையினால், ஜனாதிபதியும் - பிரதமரும் உடனடியாக புதிய அரசியலமைப்பு வேலைத்திட்டங்களை கைவிட வேண்டும்.

இதற்கு மகாநாயக தேரர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.