மரணமடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் பேட்ட நடனம்! ! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

நீரில் மூழ்கி மரணமடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் திபிசன் என்ற மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் பேட்ட என்கின்ற பெயரில் வெளியான நடன வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மரணமடைந்த குறித்த மாணவனும் வேறு சில மாணவர்களும் இணைந்து பேட்ட என்கின்ற பெயரில் ஒரு நடன வீடியோ காட்சியை தயாரித்து அதனை கடந்த 4 ஆம் திகதி வெளியிட்டு இருந்தனர்.
குறித்த நடனக் காட்சியில் பிரதான பாத்திரம் ஏற்று நடிக்கும் திவிசன் இன்று வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதேவேளை, வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த தரம் 11 யைச் சேர்ந்த 6 மாணவர்கள் ஈரப்பெரியகுளத்திற்கு சென்றிருந்த வேளை திவிசன் மற்றும் கரிகரன் என்கின்ற இரு மாணவர்கள் தவறி  நீரில் விழுந்த நிலையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.