அமித் ஷாவுக்கு பன்றி காய்ச்சல்


பா.ஜ., தலைவர் அமித் ஷா பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானதை அடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து, அவருக்கு ரத்த பரிசாேதனை செய்யப்பட்டது. அவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, அமித் ஷாவே தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மத்திய அமைச்சர், பியுஷ் கோயல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, ஷாவின் உடல் நலம் குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

No comments

Powered by Blogger.