கோலி, தோனிக்கு சச்சின், சேவாக் பாராட்டு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் எம்.எஸ் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் சேவாக் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. 299 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனியின் அட்டகாசமான ஆட்டத்தால், வெற்றிக்கனியை பறித்தது. கோலி(104) சதமடிக்க, தோனி(55) அரைசதம் அடித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து, இந்திய அணியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்தர் சேவாக் பாராட்டினர். "விராட் கோலி மற்றொரு அட்டகாசமான இன்னிங்ஸை ஆடியுள்ளார். தத்தெடுத்த ஆட்டக்களத்தில் மற்றொரு சிறப்பான ஆட்டம். தோனியும் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்" என ட்வீட் செய்தார். இந்த வெற்றி குறித்து ட்வீட் செய்த சேவாக், "கோலியிடம் இருந்து மற்றொரு அதிரடி ஆட்டம். தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி ஸ்டைலாக போட்டியை முடித்தார்கள். அடுத்து வரும் போட்டிகளில், 4 5 6வது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும்" என்று பாராட்டினார்.

No comments

Powered by Blogger.