ஜி.வி.பிரகாஷின் அக்கா ஐஸ்வர்யா ராஜேஷ்


மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-க்கு அக்காவாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் தனது தனசேகரன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல் வந்தது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவர் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

No comments

Powered by Blogger.