சமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே!

சமஷ்டி குணாதிசயங்களுடன் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாக இருந்தால் அதற்கான எதிர்ப்பினை வெளியிடுவோம் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.


கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

”இன்று நாட்டிலுள்ள அனைவரும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளார்கள். உண்மையில், 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்துக்கு பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டது. இதில், சாகும்வரை ஜனாதிபதியாக நீடிக்கும் அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ உள்ளடக்கியிருந்தார். இந்த அரசியலமைப்புக்கு மாறாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று அப்போதுதான் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காகவே, சோபித தேரர் உள்ளிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து 19ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தோம்.

இதனூடாக ஜனாதிபதியின் பதவிக் காலம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரம் உள்ளிட்டவற்றை நாம் குறைத்துள்ளோம்.

எமது நாட்டுக்கு தற்போது புதிய அரசியலமைப்பொன்று தேவைப்படுகிறது. இந்த அரசியலமைப்புக்கான பணிகள், அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்துக்கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது, இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தேவையில்லாத இனவாதத்தை பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.

நாம் அனைவரும் பௌத்தர்கள் என்ற வகையில், பௌத்தத்துக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினை வருவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அதேபோல, நாட்டை பிளவடையச் செய்யவும் நாம் என்றும் துணைபோக மாட்டோம். அப்படியான ஒரு அரசியலமைப்பு வந்தால், நாமே முதலில் அதற்கெதிராக குரல் கொடுப்போம்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.