புதிய படத்திற்காக அனுஷ்கா எடுக்கும் பயிற்சி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 2011-ம்
ஆண்டு ‘வஸ்டடு நா ராஜு’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹேமந்த் மதுகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அனுஷ்கா செவித்திறன், பார்வைத் திறன் குறைபாடுள்ளவராக நடிக்கிறார். இதற்காக தற்போது பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதால் அந்தந்த திரையுலகைச் சார்ந்த நடிகர்களைப் படத்தில் இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீதாஞ்சலி, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களை தயாரித்த கோனா வெங்கட் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.
Powered by Blogger.