இந்திய படகுகளை மீட்க 70 பேர் கொண்ட இந்திய மீனவர்கள் குழு இலங்கை வருகை

எல்லை தாண்டி மீன் பிடித்ததான  குற்றச்சாட்டில் கடந்த 2014 ஜீன்  முதல்    2018 ஆகஸ்ட் மாதம்  வரையி லான   நான்கு ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை, மற்றும்  காரை க்கால் பகுதிகளைச் சேர்ந்த 183 படகுகள்  இலங்கை கடற்படையினரால்  பறிமுதல் செய்யப்பட்டது.


பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க தமிழகத்தில் மீனவ அமைப்புகள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வந்த நிலையில்,  இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சகத்தின்  கோரிக்கையேற்று   இலங்கை அரசு படகுகளை விடுவிக்க  நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2018 அக்டோபர் இறுதியில்  இந்திய படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள்  உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட குழு இலங்கை சென்று

விடுவிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டதில் 50க்கும் குறைவான படகுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை இந்திய அரசுக்கு சமர்பித்தனர்.இதனையடுத்து நேற்று  ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 9 படகுகளில்  மீன்பிடி தொழிலாளர்கள்,

படகு உரிமையாளர்கள், இயந்திரம் மற்றும், படகு பழுது பார்ப்பவர்கள்  உள்ளிட்ட 71 பேர் கொண்ட மீட்புக் குழுவினர்கள்  காரை நகரை வந்தடைந்தனர். இன்று காரை நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒன்பது படகுகளை ஒரே நாளில் மீட்டனர்.

மீட்புக்குழுவினர் கூறும் போது படகுகளை மீட்க மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என நினைத்து அனுமதி பெற்று இங்கு வந்தோம் ஆனால் இங்கு காற்றின் வேகம் குறைந்து கடல் சீற்றம் இல்லாமல் படகுகளை மீட்க சாதகமான சூழல் இருந்தபடியாளும் இலங்கை கடற்படையினர்

மிகவும் உதவிகரமாக இருந்தபடியால் ஒரே நாளில் ஒன்பது படகுகளையும் மீட்டுவிட்டோம் நாங்கள்மீட்கப்பட்ட படகுகளுடன் வரும் 20ந்தேதி ராமேஸ்வரம் புறப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இலங்கையிலுள்ள திருகோணமலை,

கிரான்ஞ்சி,யாழ்பானம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  36படகுகளை மீட்க புதுக்கோட்டை, நாகை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீட்புக்குழுவினர்கள் நான்கு கட்டமாக இலங்கை சென்று படகுகளை மீட்டுவரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.