தமிழின அழிப்பில் கருணாநிதி குற்றவாளியான பின்புலம்

தமிழின அழிப்பின் மூலம் தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிப்பதென்பது  அனைத்துலக மட்டத்தில் பல கண்ணிகள் சேர்ந்து உருவாக்கிய ஒரு சங்கிலிப் பிணைப்பு.



இந்த சங்கிலிப் பிணைப்பில் ஏதோ ஒன்றை அறுத்து விட்டாலே தமிழீழ நடைமுறை அரசைக் காப்பாற்றி விடலாம் என்று புலிகள் அதற்காக பெரும் பிரயத்தனப் பட்டார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அந்த கண்ணிகளில் ஒன்றாக திமுக  இருந்தது.

இந்த அழித்தொழிப்பு சங்கிலியில் திமுக ஒரு முக்கிய கண்ணி இல்லைத்தான் - ஆனால் ஒரு வலுவான கண்ணியாக அது இருந்தது.

அந்த அடிப்படையில் திமுக அந்த பிணைப்பிலிருந்து தனது பிடியைத் தளர்த்துவது இன அழிப்பை நிரந்தரமாக அல்லாவிட்டாலும் தற்காலிகமாகவேனும் தடுத்திருக்கும்.

உண்மையில் புலிகளுக்குத் தேவைப்பட்டது இந்தத் தற்காலிகத் தாமதம்தான்.

ஆனால் கருணாநிதியால் தமிழ்த்தேச  அரசியல் சார்ந்து மட்டுமல்ல அறம் சார்ந்து கூட சிந்திக்க முடியவில்லை.
தமிழின அழிப்பில்  கருணாநிதி குற்றவாளியான பின்புலம் இதுதான்.

#TenYearsGenocide.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.