நாங்க ரெடி?... அவங்க ரெடியா?

ரசிகர்களின் பேட்ட, விஸ்வாசம் தொடர்பான ரசிகர்களின் மோதலை இயக்குனர் வெங்கட் பிரபு சமாதானம் செய்து வைத்துள்ளார்.


பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களுக்காக படைத்த விருந்து தான் ‘பேட்ட’ திரைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்காக.....
முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைல், அசத்தல் நடிப்பில் வெறித்தனமான கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம்.

 ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதும் தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

இதையடுத்து வசூல் தொடர்பாகவும், விமர்சனம் தொடபாகவும் ரஜினி, அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இதை சமாதானப்படுத்தும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. இரண்டு படங்களும் ஒன்றாக வெளியாகியுள்ளது. தல, தலைவர் ரசிகர்கள் இதை கொண்டாடும் நேரம். தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு அசத்தலான துவக்கம்.’ என் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ‘இததா நாங்களும் சொல்றோம் கேட்க்க மாட்டிரங்கல தலைவர நாங்க மதிக்கிறோம் அதே நேரம் தலயை அவமான படுத்தானலும் சும்மா இருக்க மாட்டோம்.’ என அஜித் ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.