சம்பள உயர்வை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டம் நாளை (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.


பிரதான எதிர்ப்பு பேரணி சகல பொதுநல அமைப்புக்களினதும் பங்களிப்புடன் கொழும்பு கேஸ்பார் சந்தியில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் இந்த போராட்டங்கள் மாத்தளை, இரத்தோட்டை, பொகவந்தலாவை, ஹற்றன், மத்துகம, பதுரலிய, தலவாக்கலை, ராகல, நுவரெலியா, தெல்தொட, இரத்தினபுரி போன்ற மலையகப்பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு, கேகாலை தெய்யோவிட்ட, பதுளை நகரம், அப்புத்தளை, தெமொதர, எட்டம்பிட்டிய பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.

தமிழர் தாயக பகுதிகளான யாழ்ப்பாணத்தில் மாலை 3 மணிக்கு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகிலும், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை ருஹூணு பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் பகல் 12 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், வடமேல் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரித்துத் தருமாறு வலியுறுத்தி இதற்கு முன்னரும், இலங்கையின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தபோதும் இலக்கை அடையமுடியாமல் போனது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.